திருக்கை (Batoidea) என்பது பெரும்பாலும் தட்டை வடிவ உடலும், நீள வாலும் கொண்ட ஓர் நீர்வாழ் உயிரினம் ஆகும். இதனை திருக்கை மீன் என்று அழைப்பர்.
தேவையான பொருட்கள்:
புள்ளி திருக்கை மீன்-1/2 கிலோ
தக்காளி- 3அல்லது4
பச்சை மிளகாய்-காரத்திற்கு
உப்பு- தேவைக்கு
மிளகாய்தூள்- காரத்திற்கேற்ப
மஞ்சள்தூள்- சிறிதளவு
முருங்கை அல்லது கத்தரி-தேவைக்கேற்ப
தேங்காய்பால் அல்லது தேங்காய் விழுது- 3-4 டேபிள்ஸ்பூன்
மல்லி இலை- 2 கொத்து
ஊறவைக்க:
மஞ்சள்தூள்-1/4டீஸ்பூன்
தனி மிளகாய்த்தூள்-1/4 டீஸ்பூன்
உப்பு-1/4 டீஸ்பூன்
தாளிக்க தேவையான பொருட்கள்:
எண்ணெய்-2டேபிள்ஸ்பூன்
பல்லாரி-2 பொடியாக நறுக்கியது
இஞ்சி பூண்டுவிழுது-1டேபிள்ஸ்பூன்
கருவேப்பிலை- 1கொத்து
மஞ்சள்தூள்-1டேபிள்ஸ்பூன்
தனி மிளகாய்த்தூள்-1டேபிள்ஸ்பூன்
செய்முறை:
புள்ளி திருக்கையை சுத்தம் செய்து புலால் வாடை இல்லாமல் இருக்க மஞ்சள்தூள் போட்டு நன்கு அலசி எடுக்கவும். பின்னர் ஊறவைக்க தேவையான பொருட்கள் அனைத்தையும் போட்டு நன்கு விரவி 20நிமிடம் ஊற வைக்கவும்.
அதன் பிறகு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் தாளிக்க தேவையான பொருட்கள் அனைத்தையும் போட்டு கறி தாளிப்பு போன்று நன்கு வதங்க விட்டு, ஊற வைத்துள்ள மீனை அந்த சட்டியில் போட்டு மசாலா மீனில் படுமளவு நன்கு கிளறி மூடி போட்டு ஐந்து நிமிடம் சிம்மிலேயே வேக விடவும்.பிறகு நீளவாக்கில் வெட்டி வைத்துள்ள முருங்கையை போட்டு அத்துடன் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி பத்து நிமிடம் சிம்மில் வைத்து வேக விடவும். முருங்கையை சேர்த்து இந்த மீனை சமைக்கும் போது கூடுதல் சுவையுடன்,மணமாகவும் இருக்கும்.
முருங்கை முக்கால் பாகம் வெந்ததும்,கிரேவிக்காக தேங்காய் விழுது,காரத்திற்கேற்ப தேவைப்பட்டால் மிளகாய்த்தூள்,உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு கலந்து பிறகு அந்த மீனில் ஊற்றி கொஞ்சம் கிரேவியாக வந்ததும் மல்லி இலை தூவி அடுப்பை அணைத்து விடவும்.
நன்மைகள்:
திருக்கை மீனில் பல வகை உண்டு.ஆனாலும் புள்ளி திருக்கையில்தான் அதிக சுவையுடன் நன்றாக இருக்கும்.அதனால் திருக்கை வாங்கும் போது அதில் புள்ளி உள்ளதை பார்த்து வாங்குவது அவசியம்.இது பார்ப்பதற்க்கு தட்டையா,வட்ட வடிவில் இருக்கும்.
இந்த புள்ளி திருக்கை மீனில் நிறையவே சத்துக்கள் காணப்படுகிறது.இதனை தொடர்ந்து வாரம் ஒரு முறையோ அல்லது இரு முறையோ எடுப்பதால் கை,கால்,மூட்டு வலி மற்றும் குறுக்கு வலிக்கு மிகவும் ஏற்றது. அதனுடைய முள்ளை கடித்து சாப்பிடுவதால் எலும்புகள் மிக உறுதியாகவும் இருக்க உதவுகிறது.
பின் குறிப்பு:
இந்த மீனை சமைக்கும் போது புளி ஊற்ற தேவையில்லை.மற்ற மீனை சமைக்கும் போது பூண்டு மட்டும் தான் சேர்ப்போம்.திருக்கை,சுறா மீனை சமைக்கும் போது இஞ்சிபூண்டு பேஸ்ட் போட்டால் வித்தியாசமான சுவையுடன் நல்ல மணமாக இருக்கும்.
இதனை சாதத்தோடு வைத்து சாப்பிடும் போது கூடுதல் சுவையுடன் நன்கு ருசியாக இருக்கும்.....
இதோ மதிய சாப்பாட்டிற்கு தேவையான கார சாரமான "புள்ளி திருக்கை மீன்"ரெடி.....
Comments
Post a Comment