பாரம்பரிய ஈத் பெருநாள் வட்லாப்பம் / Eid Vattalappam /Egg Pudding

தேவையான பொருட்கள்:

       
முட்டை-5
தேங்காய்பால்- 1கப்(தலைப்பால் மட்டும்)
சீனி- 1கப்
கன்டன்ஸ்ட் மில்க்- விருப்பத்திற்கு
பாதம்- தேவைக்கு
பிஸ்தா- தேவைக்கு
ஏலம்-3
மஞ்சள்தூள்- 1சிட்டிகை



செய்முறை:
                    முதலில் துருவிய தேங்காய்பூவை தண்ணீர் சேர்க்காமல் சுத்தமான சாக்ஸில் போட்டு நன்கு பிழிய வேண்டும்.இவ்வாறு கையால் அழுத்தி பிழியும் போது வரக்கூடிய கெட்டியான சாறுதான் தலைப்பால் இதை ஒரு பாத்திரத்தில் அளந்து  தனியாக எடுத்துக்கொள்ளவும்.பின் முட்டையை தனித்தனியாக உடைத்து எந்த பாத்திரத்தில் தலைப்பாலை அளந்து வைத்தோமோ அதே பாத்திரத்தில் அளந்து கொள்ளவும்.அதேபோல் சம அளவு சீனியையும் எடுத்துக்கொள்ளவும்.கன்டன்ஸட் மில்க் சேர்ப்பதாக இருந்தால் சீனியை அந்த அளவு பாத்திரத்திற்கு முக்கால் பாகம் எடுத்து அத்துடன் ஏலக்காயில் உள்ளே உள்ள பருப்பை மட்டும் எடுத்து சீனியோடு மிக்ஸியில் பவுடர் பதத்தில் அரைத்து எடுத்து தேங்காய்பாலுடன் அதனை நன்கு கலந்து கன்டன்ஸட் மில்க் சுவைக்கு தகுந்தாற்போல் சேர்த்து,பின் அளந்து வைத்துள்ள முட்டையையும் சேர்த்து பிளன்டரில் நன்கு அடித்து அத்துடன் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து மீண்டும் அடித்து கொள்ளவும்.(மஞ்சள்தூள் முட்டையின் வாடையை எடுத்து விடும்),அதன் பிறகு எந்த பாத்திரத்தில் வட்லாப்பம் வைக்க போகிறோமோ அந்த பாத்திரத்தில் நெய் தடவி இந்த கலவையை வடிகட்டி ஊற்றி அவனிலோ அல்லது பிரஷர் குக்கரிலோ வேக வைக்கவும்.குக்கரில் கால் பகுதி தண்ணீர் ஊற்றி அதற்கு மேல் களவாடை அதாவது(ஸ்டான்ட்)போட்டு வட்லாப்ப சட்டியை ஏற்ற வேண்டும்.சட்டியை சில்வர் பேப்பரினால் நன்கு மூடி,பின் சட்டிக்கு உண்டான மூடியையும் போட்டு இறுக்கமாக மூடி குக்கர் மூடியையும் போட்டு அதிகமான தணலில் இரண்டு விசில் வரை வேக விடவும். பின் தீயை குறைத்து 15-20 நிமிடம் நன்கு வேக வைக்கவும்.பின் குக்கரை திறந்து ஒரு கத்தியால் குத்தி பார்க்கும் போது கத்தியில் ஏதும் ஒட்டவில்லை என்றால் அதுதான் சரியான பதம்.அதன் பின் வேக வைத்த வட்லாப்பத்தில் சுற்றி வர கத்தியால் சுற்றி விட்ட பிறகு ஒரு டிரேயில் அதனை கவிழ்த்தி விட்டால் சிறிது கூட ஒட்டாமல் வந்து விடும். அதன் பிறகு நட்ஸ் தூவி விருப்பமான வடிவத்தில் வெட்டி சாப்பிடலாம்.
            
             பின் குறிப்பு: இதில் சீனிக்கு பதிலாக முழுவதுமாக கன்டன்ஸட் மில்க் அல்லது கித்தில் கருப்பட்டி சேர்த்தும் செய்யலாம்.ரெடிமேடாக கிடைக்கும் தேங்காய்பாலை விடவும் தேங்காய் பூவை வைத்து பால் எடுக்கும்போது ரொம்ப மிருதுவா,ருசியும் கூடுதலாக இருக்கும்.
                     பெருநாள் காலை டிபனுக்கு பிறகு சாப்பிட இந்த ஸ்வீட் எல்லோர் வீட்டிலேயும் கண்டிப்பாக செய்யக்கூடிய அருமையான ஒரு டிஷ்.
                  இப்போது அசத்தலான "ஈத் வட்லாப்பம் தயார்".

Comments