புடலங்காய் கூட்டு தமிழ் நாட்டில் மிகவும் பிரபலமான மற்றும் பாரம்பரியமான ஒரு கூட்டு வகை ஆகும்.. இது செய்வதும் மிகவும் சுலபம்.. தமிழகத்தில் இவை பெரும்பாலான கல்யாண விருந்துகளில் இடம் பிடித்திருக்கும்.
புடலங்காயில் தண்ணீர் சத்து மற்றும் ஃபைபர் அதிகமாக இருப்பதனால், நம் உடம்பிற்கு மிகவும் நல்லது.
தேவையான பொருட்கள்:
புடலங்காய் - 2 கப் (நறுக்கியது)
வேக வைக்க
கடலைபருப்பு பருப்பு - 1/4 கப்
சிறுபருப்பு 2 மே.கரண்டி
தக்காளி 1பூண்டு 4 பல்
தண்ணீர் 1/4 கப்
மஞ்சள் தூள்- 1 சிட்டிகை
குக்கரில் 2 வீசில் வேக வைத்து குழையாமல் வேக வைத்து எடுக்கவும்.
அரைக்க:
தேங்காய் பூ 1/4 கப்
சீரகம் 1/4 டீஸ்பூன்
பச்ச மிளகாய் 4
சிறுது தண்ணீர் ஊற்றி அரைக்கவும்.
தாளிக்க:
தேங்காய் எண்ணெய் 1 மே.கரண்டி
கடுகு 1/4 டீஸ்பூன்
சீரகம் 1/4 டீஸ்பூன்
வெங்காய் 1 பெரியது
கறிவேப்பிலை
செய்முறை:
முதலில் புடலங்காயை மேல் தோல் சிறுது நீக்கி நீரில் கழுவி, பின் அதனை நறுக்கிக் கொள்ளவும்
கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, சீரகம் வெங்காய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பிறகு நறுக்கிய புடலங்காய் சேர்த்து வதக்கவும்.
காய் வதங்கிய பிறகு வேகவைத்த பருப்பினை சேர்க்கவும். சிறுது தண்ணீர் அலசி சேர்க்கவும்.
இதனுடன் அரைத்த தேங்காய் விழுது, தேவைக்கு உப்பு சேர்த்து பச்ச வாசனை போகும் வரை குறைந்த தணலில் வேக வைத்து எடுத்தால் சுவையான புடலங்காய் கூட்டு ரெடி..
விடியோ வடிவில் காண இங்கு க்ளிக் செய்யவும் : புடலங்காய் கூட்டு
புடலங்காயை நாம் உணவில் அதிகம் சேர்த்து வந்தால் கிடைக்கும் நன்மைகள்:
அஜீரண கோளாறு நீங்கும். பசியைத் தூண்டும்.
குடல் புண்ணை ஆற்றும். வயிற்றுப்புண், தொண்டைப்புண் உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால், அதன் பாதிப்புகள் குறையும்.
இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், மலச்சிக்கலைப் போக்கும்.
பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலைக் குணப்படுத்தும். கருப்பைக் கோளாறுகளைப் போக்கும்
நீர்ச்சத்து அதிகமிருப்பதால் உடலில் உள்ள தேவையற்ற உப்புநீரை வியர்வை, சிறுநீர் மூலம் வெளியேற்றும்.
Comments
Post a Comment