கபாப் இப்படி தான் ஆரம்பம் ஆனது?
அந்த கால மனிதம் சாப்பிடும் அணலில் சுட்டு சாப்பிடும் உணவு வகை தான் கபாப்
கபாப் க்கு என்று ஒரு வரலாறு உண்டு அக்காலத்தில் போர்க்களத்திற்கு சென்று வெற்றி பெரும் மன்னர்கள், சிப்பாய்கள் அந்த கூரிய வாளில் இளம் ஆட்டின் தொடைப்பகுதியில் காரம் மற்றும் உப்பு தடவி அதனை குத்தி நெருப்பில் வாட்டி சாப்பிட்டதாக சிலர் சொல்லி கேட்டு இருக்கிறோம்.
அணல் நெருப்பில் அதனை சுட்டு எடுத்து சாப்பிடும் சுவை அருமையாக இருக்கும். இப்பொழுது அதன் முறையினை காலத்துக்கு தகுந்தது போல் மாற்றம் செய்து ருசியாக வித விதமாக சமைத்து வருகிறோம்
கபாப் செய்ய ஏற்ற கறி எது? எப்படி ?
சிக்கனோ, மட்டனோ இளம் கறியாக இருக்க வேண்டும் எலும்பு, ஜவ்வு இல்லாமல் சிறு கொழுப்பு உள்ள கறியாக பார்த்து வாங்கனும்.
கபாப் வகைகள் :
ஷீக் கபாப், மலாய் கபாப், தாங்கரி கபாப், ஹரியாலி கபாப், ஷமி கபாப், இப்படி பல வகைகள் உணடு அசைவ கபாப், சைவ கபாப், முட்டை கபாப் மற்றும் கடல் உணவுகள் கபாப் என்று வரிசை நீண்டுக்கொண்டே போகும்.
இப்பொழுது ஷீக் கபாப் எப்படி செய்வது என்று பார்க்கலாம்
தேவையான பொருட்கள்:
மட்டன் கைமா 1/2 கி
வறுத்து அரைக்க:
பட்டர் 1/2 மே.கரண்டி
ஷா ஜீரா 1/4 டீஸ்பூன்
மராட்டி மொக்கு 1
அன்னாசி பூ சின்னது 1/2
வெங்காய் 1
பச்சமிளகாய் 4-5 (கார தேவைக்கு)
நன்றாக இளம் தணலில் வதக்கவும். வெங்காயம் கோல்டன் ப்ரவுன் ஆகவேண்டும் பிறகு அதில்
தனியா 1/2 மே.கரண்டி
தனி மிளகாய்த்தூள் - 1/2 மே.கரண்டி
சிக்கன் கபாப் மசாலா 1/2 மே.கரண்டி
கரம் மசாலா 1/4 டீஸ்பூன்
மஞ்சள்தூள் 1/4 டீஸ்பூன்
உப்பு தேவைக்கு சேர்த்து வாசனை வரும் வரை வதக்கி ஆற விடவும்.
அரைக்க:
மேலே உள்ள பொருட்கள் எல்லாம் ஆறிய பிறகு மிக்ஸி ஜாரில் சேர்க்கவும்
இதனுடன் கொத்தமல்லி இலை 1/2 கப்
எலுமிச்சை சாறு 1/2 கலந்து சிறுது தண்ணீர் ஊற்றி அரைக்கவும்.
மட்டன் கைமா வை நன்றாக அலசி தண்ணீர் வடிகட்டி எடுத்து வைக்கவும்.
அதனுடன் அரைத்த விழுது , இஞ்சி பூண்டு 1 மே.கரண்டி , பட்டர் 1/2 மே.கரண்டி தேவைக்கு முட்டை வெள்ளை கரு கலந்து நன்றாக மிக்ஸ் செய்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
பிறகு kebab skewers sticks தேவைக்கு எடுத்து அதில் சின்ன சின்ன உருண்டைகளாக செய்து குச்சியில் உருட்டி வைக்கவும்.
தவாவில் எண்ணெய் 2 மே.கரண்டி ஊற்றி கபாப் குச்சிகளை வைக்கவும். 4 புறமும் சுற்றி வரை கோல்டன் ப்ரவுன் ஆகும் வரை வைத்து எடுக்கவும். சுவையான் மட்டன் கபாப் ரெடி...
- Mutton kaima 1/2 kg
- Roast and grind:
- Butter 1/2 tsp
- Shah Jira 1/4 tsp
- Marathi Mokku1
- Star anise
- Onion1
- Green Chili 4-5
- Coriander Powder 1/2 Tbsp
- Red Chili Powder - 1/2 Tbsp
- Chicken Kabab Masala 1/2 Tbsp
- Garam masala 1/4 tsp
- Turmeric 1/4 tsp
- Salt as needed
BambBBQ Steel Skewers Flat with Wooden Handle
https://amzn.to/3gerMH3
https://amzn.to/3AYxncx
Super..👍
ReplyDeleteThank You
Delete