தேவையான பொருட்கள்:
பல்லாரி- 6(நீளவாக்கில் வெட்டியது)
கொத்தமல்லி இலை- 1/4கப்
புதினா - 1/4கப்
பச்சை மிளகாய்-12-15(காரத்திற்கேற்ப்ப )
ரம்ப இலை - 2-3
எலுமிச்சை - 1(பெரியது )
பாஸ்மதிஅரிசி-1கிலோ
கறி-1கிலோ
தயிர்-1/2கப்
பட்டை,
கிராம்பு,ஏலம்- தேவையான அளவு
நெய்-100கிராம்
தேங்காய் எண்ணெய்-150மி்லி
இஞ்சிபூண்டு விழுது-4 டேபிள்ஸ்பூன்
உப்பு- தேவைக்கு
பால்- 1/4 கப்
அரைத்து வைக்க:
பாதம்-12-15
தேங்காய்-3 டேபிள்ஸ்பூன்
பிஸ்தா-8-10
முந்திரிபருப்பு- 8-10
கசகசா-1டேபிள்ஸ்பூன் இவை அனைத்தையும் கொஞ்சாக தண்ணீர் விட்டு மிக்ஸியில் நன்றாக அரைத்து கொள்ளவும்.
செய்முறை:
முதலி்ல் கறியை சுத்தமாக கழுவிக்கொ்ளவும்.குக்கரில் மேற் சொன்ன அளவில் கொஞ்சம் நெய்,நீள வாக்கில் வெட்டிய ஒரு வெங்காயம் சேர்த்து நன்கு பொறிய விடவும்.பின் தயிர்,பட்டை,கிராம்பு,ஏலம் தலா ஒன்று சேர்த்தால் போதும்,மீதியை பிரியாணி தாளிப்பில் சேர்த்து கொள்ளலாம்.பின் 1/2டீஸ்பூன் இஞ்சி,பூண்டு விழுது,ரம்பஇலை சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கியபின் தேவைக்கு உப்பு சேர்த்து சுத்தம் செய்த கறியை 1/2டம்ளர் தண்ணீர் சேர்த்து 3,4 விசில் வைத்து முக்கால் பதத்திற்கு மேல் வேக விடவும்.பின் கறியை தனியாக எடு்த்து வைத்து கொள்ளவும்.
அரிசியை கலைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.பிரியாணி செய்வதற்க்கு அடி கனமான பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய்,நெய் ஊற்றி காய வைக்கவும்,மீதியுள்ள பல்லாரியை சேர்த்து வதக்கவும் பின் தாளிப்பிற்குண்டான பட்டை,இஞ்சிபூண்டு விழுது,ஏலம்,
கிராம்பு,ரம்பஇலை இவைகளை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.இந்த பிரியாணிக்கு அதிக வாசனை கொடுப்பது ரம்பஇலைதான்,இவை அனைத்தும் நன்றாக வதங்கியதும் காரத்திற்கு ஏற்ப பச்சைமிளகாயை நேராக கீறி,அத்துடன் பொடியாக நறுக்கிய மல்லி,புதினா இவைகளை போட்டு,வேகவைத்த கறியையும்,அதிலுள்ள தண்ணியையும் இதனோடு சேர்த்துவிட்டு, அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டோடு 1/2 கப் தண்ணீரை சேர்த்து நன்கு கலந்து கொதிக்க வைக்கவும்.நன்றாக கொதித்ததும் ஊற வைத்த அரிசியை அத்தோடு கலந்து 2-3நிமிடம் சிம்மில் வைக்கவும்.
இன்னொரு பாத்திரத்தில் ஒரு கப் அரிசிக்கு 1 1/4 அல்லது 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும்.கொதித்த தண்ணீரை அதனுடன் சேர்க்கவும்.ஏற்கனவே கறியில் தண்ணீர் இருப்பதால் தேவையான அளவிற்கு தண்ணீரை சேர்க்கவும்.கிண்டிவிடும்போது சிக்கினால் மீண்டும் அந்த தண்ணீரை சேர்த்து கொள்ளலாம்.
ஐந்து நிமிடம் அதிக தணலில் வைத்து பிறகு பாலை சுற்றி வர ஊற்றி விடவும்.அரிசி ஊறியதால் சீக்கிரமாக வெந்து விடும்.பின்னர் பிழிந்துவைத்த எலுமிச்சையை சுற்றிவர ஊற்றிய பிறகு இதனை சமப்படுத்தி விட்டு தோசை தவாவை சூடு படுத்தி அதற்கு மேல் பிரியாணி சட்டியை இறுக்கமாக மூடி,அதற்கு மேல் நல்ல கனமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி(ஆவி வெளியில் போகாத அளவு)15நிமிடம் சிம்மில் வைத்து,10-15 நிமிடங்களுக்கு பிறகு திறந்து பார்த்தால் காயல் ஸ்பெஷல் "அஹனி பிரியாணி"தயார்....
இத்துடன் ஜாம் வைத்து சாப்பிட இன்னும் சுவையாக இருக்கும்......
பின் குறிப்பு:இந்த பிரியாணி செய்வதற்கு தக்காளி,தனி மசாலா,மஞ்சள்தூள் எதுவும் தேவை இல்லை
Comments
Post a Comment